வயநாட்டிற்காக சேலம் Ex-போலீஸ் எடுத்த முடிவு.. கலெக்டரை பார்க்க போட்டு வந்த வேஷம் தான் ஹைலைட்
வயநாடு நிவாரண பணிகளுக்காக தனது ஓய்வூதிய தொகையில் இருந்து முப்பதாயிரம் ரூபாயை எடுத்து, கேரளாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் ஒருவர் மனு கொடுத்துள்ளார்.
சேலம் உடையாபட்டியை சேர்ந்த ஓய்வு பெற்ற காவலர் ரத்தினம், முன்னாள் முதல்வர் கருணாநிதி போன்று வேஷமிட்டு, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தார். பின்னர், தனது வங்கிக்கணக்கில் இருந்து முப்பாதாயிரம் ரூபாயை எடுத்து கேரள நிவாரண பணிகளுக்காக அனுப்பி வைக்க வேண்டும் என மனு கொடுத்தார். பொதுமக்கள் நேரடியாகவே ஆன்லைன் மூலம் தங்களது நன்கொடையை வழங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story