ஸ்கூட்டியில் சென்று டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்
சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட
33 வார்டுகளில் டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்காக
நீர்நிலைகள் தேங்கி இருக்கும் இடங்கள், காலி டயர்கள்
ஆகியவற்றை சோதனை செய்து வருகின்றனர். ஆத்தூர் நகர
மன்ற தலைவர் நிர்மலா மணிகண்டன், ஸ்கூட்டியில்
ஒவ்வொரு வார்டு பகுதியாக தினந்தோறும் சென்று டெங்கு
விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். விழிப்புணர்வு துண்டு
பிரசுரங்களை வழங்கி, டெங்கு எவ்வாறு பரவுகிறது என்பது
குறித்து விளக்கம் அளித்து வருகிறார்.
Next Story