கேட்க கூடாததை கேட்ட ஆட்டோ டிரைவர்? - குழவி கல்லை போட்டு கொன்ற கள்ளக்காதலி

x

கேட்க கூடாததை கேட்ட ஆட்டோ டிரைவர்? - குழவி கல்லை போட்டு கொன்ற கள்ளக்காதலி

சேலத்தில், பூட்டிய வீட்டிற்குள் ஆட்டோ டிரைவர் சடலமாக கிடந்த சம்பவத்தில், ஆட்டோ டிரைவரின் கள்ளக்காதலி கைது செய்யப்பட்டுள்ளார்.

சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்தவர் நிஷார் பாட்ஷா. இவருக்கும், திருப்பூரை சேர்ந்த பிரியா என்பவருக்கும் திருமணம் தாண்டிய உறவு இருந்துள்ளது. இவர்கள் இருவரும் களரம்பட்டி பகுதியில் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளனர். இந்நிலையில், இருவருக்கும் ஏற்பட்ட தகராறில், நிஷார் பாட்ஷாவை, பிரியா, குழவி கல்லை போட்டு கொலை செய்துள்ளார். பின்னர், யாருக்கும் தெரியாமல் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகியுள்ளார். இது தொடர்பாக போலீசார், பல நாட்களாக நடத்திய தேடுதல் வேட்டையில், பிரியா கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய விசாரணையில், நிஷார் பாட்ஷா, தன்னை பாலியல் தொழில் செய்யுமாறு வற்புறுத்தியதாகவும், அதனால் கொலை செய்ததாகவும் வாக்குமூலம் அளித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்