சிட் ஃபண்ட் மோசடி?.. சட்டை இல்லாமல் நடுரோட்டில் ஓனர்.. சுற்றி வளைத்த மக்கள்..

x

திருப்பூர் மாவட்டம் ஆலம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தீபக்திலக். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு நிதி நிறுவனம் நடத்தி வந்த இவர், சேலம், நாமக்கல் என பல மாவட்டங்களில் கிளை நிறுவனங்கள் தொடங்கி நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. நிறுவனத்தில் முதலீடு செய்யும் பணத்திற்கு அதிக வட்டி தருவதாக கூறி பொது மக்களிடம் இருந்து லட்சக் கணக்கிலான பணத்தை தீபக்திலக் முதலீடு பெற்றதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், சொன்னபடி பணத்தை திருப்பி கொடுக்காததால், தீபக்திலக்கை செல்போன் மூலம் தனியே அழைத்த முதலீட்டாளர்கள், சேலம் பேருந்து நிலையம் அருகே அவரை முற்றுகையிட்டு தாக்க முயன்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில், தீபக்திலக் சாலையில் படுத்துக் கொண்டு தன்னை காப்பாற்றுங்கள் என கூச்சலிட்டது பரபரப்பை மேலும் கூட்டியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், தீபக்திலக்கை மீட்டதோடு... விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்