நீருடன் சாக்கடை.. உணவில் பூச்சி.. அலட்சிய பதில்.. அதிர்ச்சியில் பெண்கள் | Thanthitv
சேலம் தனியார் நர்சிங் கல்லூரி மாணவிகள்
சாப்பிட்ட உணவில் பூச்சி இருந்ததால், வாந்தி மயக்கம் ஏற்பட்டு, மருத்துவமனையில்
60 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 400-க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். BSC நர்சிங் படிக்கும் 60க்கும் மேற்பட்ட மாணவிகள் ஞாயிற்றுக்கிழமை மதியம் சோறு மற்றும் பச்சை பயிறு குழம்பு உட்கொண்டுள்ளனர். இதையடுத்து அவர்களுக்கு,
திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவர்கள், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் வீராணம் காவல்துறையினர் உணவு சமைத்த ஊழியர்கள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி உணவு கூடத்தில் ஆய்வு செய்தனர். இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவி, நேரில் வந்து மாணவிகளிடம் நலம் விசாரித்தார். உணவு சுகாதாரமான முறையில் சமைக்கவில்லை என்று பலமுறை புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று பாதிக்கப்பட்ட மாணவிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.