நாடே பற்றிய பாலியல் தீயின் `முதல் நெருப்பு’ நடிகை ஓபன் டாக்..பேரதிர்ச்சியில் கோலிவுட்

x

நாடே பற்றிய பாலியல் தீயின் `முதல் நெருப்பு’

நடிகை ஓபன் டாக்..பேரதிர்ச்சியில் கோலிவுட்

2 ஸ்டார் ஹீரோக்கள் தலையில் இறங்கிய இடி

ஹேமா அறிக்கை ஏற்படுத்தி இருக்கும் பரபரப்பினூடே, ஹேமா கமிட்டி அமைய காரணமாய் இருந்த டபிள்யு.சி.சி அமைப்பின் உறுப்பினரும், பிரபல கேரள நடிகையுமான சஞ்சிதா மாடத்தில் நடிகைகள் சந்தித்து வரும் சிக்கலான தருணங்களை முன் வைத்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். பார்க்கலாம் விரிவாக...

புகழ் பெற்ற நாடக ஆசிரியராகவும், பிரபல குணச்சத்திர நடிகையாகவும் கேரளாவில் அறியப்படுபவர் நடிகை சஞ்சிதா மாடத்தில்...

நடிகைகள் மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்களை எதிர்த்தும், பணிச்சூழலில் நடிகைகளுக்கான சமத்துவத்தை வலியுறுத்தியும் கேரளாவில் அமைக்கப்பட்ட வுமன்ஸ் இன் சினிமா கலெக்டிவ் அமைப்பில் சஞ்சிதா மாடத்தில் உறுப்பினரும் கூட..

இந்த அமைப்பு வலியுறுத்தியதன் பேரில் தான், கேரளா அரசாங்கத்தால் ஹேமா கமிட்டி அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...

இந்நிலையில், கல்வியறிவில் சிறந்த கேரளாவில் நடிகைகள் மீது இதுபோன்ற பாலியல் அத்துமீறல்கள் எல்லாம் எப்படி சாத்தியம் என மக்கள் ஆச்சர்யப்படுவதாக கூறியிருக்கும் சஞ்சிதா பாட்டில்.. நல்ல வேளையாக ஹேமா அறிக்கை வந்து அனைத்தையும் அம்பலப்படுத்தியது என சொல்லியிருக்கிறார்.. இல்லையென்றால் நடிகைகளுக்கெல்லாம் வேறு வேலையில்லை, இதுபோன்று எதையாவது அவதூறை பரப்பி தங்களை உதாசீனப்படுத்தியிருப்பார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்...

இந்த பாலியல் தாக்குதல்களை தாண்டி, நடிகைகள் படப்பிடிப்பு தளத்தில் கழிவறை வசதிக்கே போராட வேண்டியிருப்பதாக கவலை தெரிவித்திருக்கிறார்...

ஒரு கேரவன் இருந்தால், அதை இரண்டாக பிரித்து.. ஒரு பகுதியை ஆறு நடிகைகளுக்கும்... மற்றொரு பகுதியை ஒரு நடிகருக்கும் கொடுப்பார்களாம் கேரள சினிமாவில்..

ஒரு தடவை, தன்னையும் தன்னுடன் நடித்த நடிகைகளையும், சிதிலமடைந்த கட்டடத்திற்குள் தங்க வைக்க படத் தயாரிப்பு நிறுவனம் முயன்றதாகவும், நாங்கள் அவர்களிடம் சண்டையிட்டு ஒரு விடுதி பெற்றதாகவும் மனக்குமுறலை கொட்டியிருக்கிறார்...

சிகையலங்கார நிபுணர்களும், காஸ்ட்யூம் டிஸைனர்களும் படப்பிடிப்பு தளத்தில் மரியாதையாக நடத்தப்பட மாட்டார்கள் என தெரிவித்திருக்கும் சஞ்சிதா மாடத்தில், அன்றைக்கான உணவையே அவர்கள் போராடிதான் வாங்குவதாக கூறியிருக்கிறார்...

இதனிடையே, தன்னை தமிழ் திரையுலகில் இருந்து ஒரு படக்குழுவினர் தொடர்பு கொண்டதாகவும், அப்படத்திற்கான ஒப்பந்தத்தின் போதே அட்ஜெஸ்மெண்டுக்கு சம்மதம் தானே என அவர்கள் கேட்டது தன்னை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியதாகவும் தெரிவித்திருக்கிறார்..

தொடர்ந்து, கேரளாவில் பவர் குரூப் என்ற ஒன்று இல்லையென, நடிகர்கள் மம்முட்டியும், மோகன்லாலும் மறுத்து வருவதற்கும் பதிலளித்திருக்கிறார்..

வயது வித்தியாசமின்றி நடிகைகள் மீது பாலியல் தாக்குதல் தொடுக்கப்படுவதும், படத்திற்கான ஒப்பந்தத்தில் அட்ஜெஸ்மென்ட்டுக்கும் சேர்த்து கையெழுத்திட மறுக்கும் நடிகைகளுக்கு பட வாய்ப்பு மறுக்கப்படுவதுமே கேரளாவில் பவர் க்ரூப் இருப்பதற்கான சாட்சி எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்...


Next Story

மேலும் செய்திகள்