மாணவர்களுக்காக.. சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை அதிரடி அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி முதன்மை தேர்விற்கு பதிவு செய்யும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகையுடன் பயிற்சி அளிக்கப்படும் என சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மனிதநேய அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகளின்படி, தங்களது அகாடமியில் 49 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது. இவர்களோடு, முதன்மை தேர்வுக்கு தயாராகும் புதிய மாணவர்களுக்கும் மனிதநேய மையத்தில் ஊக்கத்தொகையுடன் பயிற்சி வழங்கப்படும் எனவும், புதிய மாணவர்கள் மனிதநேய அறக்கட்டளையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பாடத்திட்டங்கள் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதால், வீட்டில் இருந்தபடியே பயிற்சி பெறலாம் எனவும் சைதை துரைசாமி குறிப்பிட்டுள்ளார்.
Next Story