முன்பதிவு செய்யாமல் சபரிமலை செல்வோருக்கு.. தேவசம் போர்டு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள், அடையாள சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என சபரிமலை தேவசம் போர்டு அறிவித்துள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில், மண்டல பூஜை டிசம்பர் 26ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14ஆம் தேதியும் நடைபெற உள்ளன.
ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமின்றி, முன்பதிவு செய்யாமல் வரக் கூடிய பக்தர்களும் சாமி தரிசனம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஆன்லைனில் முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் அங்கீகரிக்கப்பட்ட அடையாள சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பதினெட்டாம் படியில் ஒரு நிமிடத்தில் 70 முதல் 75 பக்தர்கள் வரை ஏறுவதற்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
நிலக்கல்லில் ஒரே நேரத்தில் 15 ஆயிரத்து 500 வாகனங்களை நிறுத்தும் வசதி செய்யப்படுகிறது,
யாத்திரை காலங்களில் 13 ஆயிரத்து 600 போலீசார், பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.