"அனுமதி இல்லாமல் ரப்பர் தொழிற்சாலை"அபாயத்தில் விவசாய நிலங்கள்.. - விவசாயிகள் போராட்டம்

x

ஈரோடு மாவட்டம் தொப்பம்பாளையத்தில், வனப்பகுதியை ஒட்டி ரப்பர் பேண்ட் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்தநிலையில் இந்த தொழிற்சாலை அனுமதியின்றி இயங்குவதாகவும், தொழிற்சாலை கழிவு நீர் அருகே உள்ள செயல்படாத கல்குவாரி நீரில் கலக்கப்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு விவசாய நிலங்கள், வனப்பகுதி உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், கழிவு நீர் கலந்த நீரை குடிப்பதால் கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கூறிய விவசாயிகள், தொழிற்சாலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், தொழிற்சாலையை உடனடியாக மூட வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்