97.92 சதவீத 2000 ரூபாய் நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி சொன்ன திகைக்க வைக்கும் தகவல்

x

மதிப்பிழப்பு செய்யப்பட்ட 97.92 சதவீத இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக ரிசா்வ் வங்கி அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு மே 19ஆம் தேதி, இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைப் புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறுவதாக ரிசா்வ் வங்கி அறிவித்தது. வங்கிகளில் அவற்றை டெப்பாசிட் செய்ய அக்டோபர் 7 வரை அவகாசம் அளித்தது. அக்டோபர் 8 முதல் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட 19 ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளைக் மாற்றிக்கொள்ள அனுமதி அளித்தது.

புழக்கத்தில் இருந்த 3.56 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளில், தற்போது 97.௯௨ சதவீதம் திரும்பி வந்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

பொதுமக்களிடம் தற்போது 7 ஆயிரத்து 409 கோடி ரூபாய் மதிப்பிலான இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் உள்ளதாக தெரிவித்தது.

அவற்றை ரிசா்வ் வங்கி அலுவலகங்களில் செலுத்தி செல்லத்தக்க ரூபாய் நோட்டுகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்