மகளிருக்கு மாதம் ரூ.1000...OTP எண் கேட்ட மர்ம நபர் - காணாமல் போன ரூ.15 ஆயிரம்
மகளிருக்கு மாதம் ரூ.1000...OTP எண் கேட்ட மர்ம நபர் - காணாமல் போன ரூ.15 ஆயிரம்
கடலூர் அருகே கலைஞர் உரிமை தொகை கொடுப்பதாக கூறி பெண் ஒருவரிடம் இருந்து 15 ஆயிரம் ரூபாய் மோசடி செய்த கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.கடலூர் மாவட்டம் தொழுதூர் கிராமத்தை சேர்ந்த முத்தம்மாள் என்பருக்கு இந்தியன் வங்கியில் இருந்து பேசுவதாக அவரது செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. கலைஞர் உரிமை தொகை கொடுப்பதற்காக அழைத்துள்ளதாகவும், அற்காக செல்போனுக்கு வரும் ஓடிபி எண்ணை கூறுமாறும் மறுமுனையில் பேசியவர் தெரிவித்துள்ளார். முத்தம்மாள் ஓடிபி எண்ணை கூறிய பிறகு, அவரது வங்கி கணக்கில் இருந்து 15 ஆயிரத்து 700 ரூபாய் பணம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது. இது குறித்த புகாரின் பேரில் மோசடியில் ஈடுபட்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story