பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் நீதிமன்றத்தில் ஆஜர்

x

பிரபல ரவுடி வரிச்சூர் செல்வம், 5 நாள் போலீஸ் காவலுக்கு பின், மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். வரிச்சூர் செல்வத்திடம் ஓட்டுநராக பணியாற்றிய புவனேஸ்வரன் கொலை வழக்கில் வரிச்சூர் செல்வம் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். இதற்கிடையே, புவனேஸ்வரன் கொலை வழக்குத் தொடர்பாக விசாரணை நடத்த வரிச்சூர் செல்வத்திற்கு போலீஸ் காவல் கோரி, போலீசார் மனுதாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிமன்றம் 26ம் தேதி முதல், 30ம் தேதி வரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தது. இதனையடுத்து, 5 நாள் போலீஸ் காவலுக்குப் பின், இன்று வரிச்சூர் செல்வத்தை உசிலம்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்