குத்தாலத்தில் எமன்களாக மாறிய 14 வயது சிறுவர்கள்..அதிர்ச்சி சிசிடிவி
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் ஓய்வு பெற்ற தமிழ் ஆசிரியர் வீட்டில் புகுந்து அவரை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி 20 ஆயிரம் பணம் பறிக்கப்பட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புது நகரை சேர்ந்த 86 வயது கலைவேந்தரிடம் இந்த திருட்டு சம்பவம் அரங்கேற்றப்பட்ட நிலையில், இது தொடர்பான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் விக்னேஷ் மற்றும் 14,15 வயது சிறுவர்கள் 2 பேரைக் கைது செய்தனர்... தலைமறைவான அஜய் என்ற இளைஞரை தேடி வருகின்றனர்.
Next Story