மத்திய அரசு அதிகாரி வீட்டில் கொள்ளை - கொத்தாக நகைகளை அள்ளிய மர்மநபர்கள்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே, மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலை பாதுகாப்பு அதிகாரி வீட்டின் கதவை உடைத்து, 52 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவெறும்பூர் அருகே நவல்பட்டு அண்ணாநகர் பகுதியை சேர்ந்த பாலச்சந்தர், மத்திய அரசின் துப்பாக்கி தொழிற்சாலையில் பாதுகாப்புத் துறை அதிகாரியாக பணியாற்றி வருகிறார். கேரளா மாநிலம் திருச்சூருக்கு பாலச்சந்தர் குடும்பத்துடன் சென்ற நிலையில், அவரது வீட்டின் கதவை உடைத்து, மர்ம நபர்கள் பீரோவில் இருந்த 52 சவரன் நகை, வெள்ளி பொருட்களை திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பான புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை செய்ததுடன், மர்மநபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story