"சொந்த பிள்ளைகளாலயே முதுகில் குத்தப்பட்டு.." - ஆளுநர் பரபரப்பு ட்வீட்
50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை தேசம் அதிர்ச்சியுடனும் திகிலுடனும் நினைத்து பார்க்கிறது என தமிழக ஆளுனர் ஆர்என் ரவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சமூக வலைதள பதிவில், 50 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அரசியலமைப்பை தூக்கியெறிந்து நீதித்துறையை அடக்கிய சர்வாதிகாரியின் காலடியில் நமது ஜனநாயகம் எவ்வாறு நசுக்கப்பட்டது என்பதை தேசம் நினைத்து பார்க்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆயுதமேந்திய ராணுவத்தினர் பல்கலைக்கழக விடுதிக்குள் புகுந்து, புத்தகங்கள், உடைகளை கூட எடுத்து செல்ல அனுமதிக்காமல் எங்களை உடனடியாக வெளியேற்றிய நாளை நானும் எனது நண்பர்களும் எப்படி மறக்க முடியும்? என அளுநர் குறிப்பிட்டுள்ளார்.
Next Story