பங்கேற்ற ஆளுநர்... புறக்கணித்தார் அமைச்சர் கோவி.செழியன்
பங்கேற்ற ஆளுநர்... புறக்கணித்தார் அமைச்சர் கோவி.செழியன்
தமிழக ஆளுநர் ரவி தலைமையில் நடைபெற்ற அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணித்தார். சென்னை அண்ணா பல்கலைகழகத்தின் 45-வது பட்டமளிப்பு விழா, பல்கலைகழக வளாகத்தில் உள்ள விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தேசிய அங்கீகார வாரிய தலைவர் அனில் சஹஸ்ரபுதே சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக இருப்பதால் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும் உயர் கல்வித் துறை செயலாளருமான கோபால் கலந்து கொண்டார். இதில் இளங்கலை, முதுகலை ஆராய்ச்சி படிப்புக்கான பட்டங்களை 503 மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி நேரில் வழங்கினார். இந்த பட்டமளிப்பு விழாவில் 32 மாணவர்கள் 36 மாணவிகள் என 68 தேர்வர்கள் தங்கபதக்கங்களை பெற்றனர். இதனிடையே, ஆளுநர் பட்டமளிப்பு விழாவில் மீண்டும் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி.செழியன் புறக்கணிக்கணித்தார்.