ஆளுநருக்கு அதிர்ச்சி கொடுத்த சென்னை ஐகோர்ட்

x

தமிழக அரசின் பரிந்துரையை தக்க காரணங்கள் இன்றி நிராகரித்த தமிழக ஆளுநரின் செயலுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஆயுள் தண்டனை கைதிகள் பத்து பேரை நன்னடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய மாநில அளவிலான குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்தது. இதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஒப்புதல் அளித்து, ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைத்தார். ஆனால், ஆளுநர் தகுந்த காரணங்கள் இன்றி இந்த பரிந்துரையை நிராகரித்தார். இந்நிலையில் 10 ஆயுள் தண்டனை கைதிகளும் இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த நீதிமன்றம் ஆளுநரின் செயலுக்கு அதிருப்தி தெரிவித்தது. மேலும், 8 வாரத்திற்குள் இதுதொடர்பான கோப்புகளை மீண்டும் பரிசீலிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்