"நமது மரபணுவிலேயே சனாதன தர்மம் உள்ளது" -ஆளுநர் ஆர்.என்.ரவி

x

சிக்கிம் மற்றும் கோவா மாநிலம் உருவான தினம், சென்னை ஆளுநர் மாளிகையில் கொண்டாடப்பட்டது. இதில், சிக்கிம் மற்றும் கோவாவை பூர்வீகமாகக் கொண்டு தமிழ்நாட்டில் வசிக்கும் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, இந்தியாவைப் போல, பல கலாசாரம் கொண்ட நாடு எங்கும் இல்லை என்றும், இந்தியாவில் ஒவ்வொரு நாளும் திருவிழாதான் என்றும் கூறினார். நமது விருந்தோம்பல் குணத்தால் நமது மரபணுவிலேயே சனாதன தர்மம் நிறைந்துள்ளது என்றும், அதை மறைக்கும் காரணிகள் ஒருநாள் துடைத்தெறியப்படும் என்றும் அவர் கூறினார். சனாதனத்தை வெகுவிமர்சையாக கொண்டாடும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் அவர் கூறினார்


Next Story

மேலும் செய்திகள்