மீண்டும் புயலை கிளப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி
தேசிய பாடத்திட்டத்துடன் ஒப்பிடும் போது மாநில பாடத்திட்டத்தின் தரம் மோசமாக இருப்பதாக ஆளுநர் ஆர்.என். ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் KTCT பெண்கள் மேல்நிலைபள்ளியின் நூற்றாண்டு விழாவில் கலந்துக் கொண்ட தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, மாணவர் மத்தியில் உரையாற்றினார். இந்தியாவின் வளர்ச்சிக்கு பெண்கள் அவசியம் என குறிப்பிட்டவர், பள்ளி மாணவர்களுக்கும் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்றார். தேசிய பாடத்திட்டத்தோடு ஒப்பிடும்போது மாநில பாடத்திட்டம் மோசமாக உள்ளது. நான் பல்வேறு கல்லூரிகளுக்கு சென்று மாணவர்களிடம் பேசினேன், அப்போது அவர்களுக்கு செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் குறித்த அறிவுத்திறன் குறைவாக இருந்ததாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்
Next Story