பாரதம், இந்து தர்மம் இரண்டையும் பிரிக்கமுடியாது - ஆளுநர் ஆர்.என். ரவி பரபரப்பு பேச்சு | RN Ravi

x

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாரில் வெள்ளிமலை ஹிந்து தர்ம வித்யாபூடத்தின் சார்பில் 35வது வித்யாஜோதி பட்டமளிப்புவிழா மற்றும் முதல் வித்யாபூஷன் பட்டமளிப்புவிழா நடைபெற்றது. இதில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி கலந்துகொண்டார். விழாவில் பேசிய அவர்,

இந்து தர்மம் தான் பாரதத்தை உருவாக்கியது என்றும்,

பாரதம், இந்துதர்மம் இரண்டையும் பிரிக்கமுடியாது என்ற உண்மையை உலகறியசெய்யவேண்டும் என்றும் தெரிவித்தார். ஒழுக்கத்தை எப்படி கடைபிடிக்கவேண்டும் என்றும், சுற்றுசூழலுடன் எப்படி சேர்ந்து வாழ வேண்டும் என்பதையும், சனாதன தர்மம் உணர்த்துவதாக அவர் கூறினார். ஆங்கிலேயரின் ஏமாற்று கோட்பாடுகளில் ஒன்றுதான் மதசார்பின்மை என அவர் குறிப்பிட்டார். அரசியல் சாசனம் அமைக்கபட்டபோது அங்கு இருந்தவர்கள் மதசாப்பின்மை என்ற வார்த்தையை கேட்டு நக்கலாக சிரித்ததாகவும், அரசியல் சாசனத்தில் இடம்பெறாத மதச்சார்பின்மை, செக்கூலாரிசம் என்ற வார்த்தை அவசர காலகட்டத்தில் சில சமுதாயங்களை திருப்தி படுத்துவதற்காக கூறப்பதாக தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்