முதன் முறையாக மக்களை சந்தித்து வாக்கு வேட்டை - பிரசாரத்தை தொடங்கினார் ரிஷி சுனக்

x

முதன் முறையாக மக்களை சந்தித்து வாக்கு வேட்டை - பிரசாரத்தை தொடங்கினார் ரிஷி சுனக்

ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக முதன்முறையாக வாக்காளர்களை சந்திக்கப் போகும் தேர்தல், ஜூலை 4ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், அவர் தனது பிரசாரத்தை தொடங்கினார். சுனக் ஸ்காட்லாந்தின் கன்சர்வேடிவ் கட்சி தலைவர் டக்ளஸ் ரோஸை நிக் துறைமுகத்தில் சந்தித்தார். பின்னர் அவர் துறைமுறை ஊழியர்களை சந்தித்து வாக்குகள் சேகரித்தார். இங்கிலாந்து பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சன், பதவி விலகியதைத் தொடர்ந்து, கன்சர்வேடிவ் கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ரிஷி சுனக், இங்கிலாந்து பிரதமராகவும் பதவியேற்றார். இங்கிலாந்தில் கடந்த முறை நடந்த பொதுத்தேர்தலில் பெரும்பான்மை பெற்றிருந்த கன்சர்வேடிவ் கட்சி சார்பிலேயே ரிஷி சுனக் பிரதமராக தேர்வு செய்யப்பட்டதால், அவர் தேர்தலில் போட்டியிடவில்லை.


Next Story

மேலும் செய்திகள்