வருவாய் துறை அதிகாரிகள் முன்னிலையில் தீக்குளித்த இளைஞரால் பரபரப்பு...

x

கோட்டக்கரை நேதாஜி நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் கல்யாணி. இவர் வசிக்கும் வீடு வழிப்பாதையை ஆக்கிரமித்து இருப்பதாகக் கண்டறிந்த வருவாய் துறையினர், வீட்டை அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். இதன் பாதுகாப்பு பணிக்காக போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் குவிக்கப்பட்டிருந்த நிலையில், வீட்டின் உரிமையாளரான கல்யாணியின் மகன் ராஜ்குமார் என்பவர், போதிய அவகாசம் கேட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது. அதற்கு வருவாய் துறையினர் அனுமதி மறுத்ததால், ராஜ்குமார் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்துள்ளார். இதனால், அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்த நிலையில், தீயணைப்பு துறையினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தீக்காயங்கள் 80 விழுக்காட்டை கடந்துள்ளதால் அவர் உயிர் பிழைப்பது கடினம் எனக் கூறப்படுகிறது. இதனிடையே, ஆக்கிரமிப்பு வீட்டில் அதன் உரிமையாளர்கள் இல்லாத நிலையில், வீட்டில் இருந்த பொருள்களை வெளியேற்றிய அதிகாரிகள், ஜெசிபி கொண்டு வீட்டை இடித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்