ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம்.. முக்கிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண்
ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரம்.. முக்கிய குற்றவாளிகள் நீதிமன்றத்தில் சரண்
ஆரணியில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மேலும் இருவர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே மொழுகம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் வெற்றி வேல் - ரேவதி தம்பதி.
வெற்றி வேல் கடந்த சில வாரங்களுக்கு முன்னர், கொலை செய்யப்பட்டார்.
கூலிப்படையினர் மற்றும் கள்ளக்காதலன் நாகராஜ் உதவியுடன், மனைவி ரேவதியே கணவரை கொன்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து ரேவதி, கள்ளக்காதலன் நாகராஜ், மற்றும் கூலிப்படையச் சேர்ந்த ராஜேஸ் ஆகிய மூவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இக்கொலை சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான அஜய், மற்றும் சந்திப் ஆகிய இருவரும் வேலூர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர்.
Next Story