பெண் தூய்மைப் பணியாளருக்காக NH-யை அதிரவைத்த உறவினர்கள்
விழுப்புரம் அருகே விபத்தில் பெண் ஒருவர் காயமடைந்த நிலையில், தேசிய நெடுஞ்சாலையில் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். முண்டியம்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்ற ஒப்பந்த தூய்மைப் பணியாளர் கலா, வாகனம் மோதி காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, அவரது உறவினர்கள், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 கிலோமீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனிடையே, விழுப்புரம் அருகே அயினம்பாளையத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் பாலா, சூர்யா ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
Next Story