"ஐயோ.. நொடி தவறினாலும் புள்ள உயிர் போயிடுமே..." வெறி பிடித்த தாயே வெளியிட்ட நடுங்கவிடும் வீடியோ
"ஐயோ.. நொடி தவறினாலும் புள்ள உயிர் போயிடுமே..." வெறி பிடித்த தாயே வெளியிட்ட நடுங்கவிடும் வீடியோ
லைக்குகளுக்கு ஆசைப்பட்டு, தன் குழந்தையின் உயிரை பணயம் வைத்து, தாய் ஒருவர் எடுத்த ரீல்ஸ் வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது....
ரீல்ஸ் மோகத்திலும், இணைய உலக பிரபலம் அடையும் மூர்க்கத்தனத்திலும் இப்பெண் அரங்கேற்றி இருக்கும் சம்பவம் காண்போர் மனதை பதறச் செய்கிறது...
கிணற்றின் விளிம்பில் அமர்ந்து கொண்டு, தன் குழந்தையை ஆபத்தான முறையில் கிணற்றுக்குள் தொங்கவிட்டு, இப்பெண் நடனமாடி பதிவிட்ட ரீல்ஸ்... பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது...
ஒரு சிறு தவறு நடந்தாலும் குழந்தையின் உயிரே போய்விடுமே என்ற அச்சம், இந்த ரீல்ஸ் வீடியோவை பார்க்கும் யாருக்கும் தொற்றிக் கொள்கிறது.
ரீல்ஸ் மோகத்தால் அரங்கேறி வரும் உயிர் பலிகளுக்கு மத்தியில், குழந்தையை வைத்து விபரீத வித்தை காட்டிய இந்தத் தாயின் செயலுக்கு கண்டனங்கள் வலுப்பதோடு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் வலியுறுத்துகின்றனர்...