பெரும் சர்ச்சையான ரீல்ஸ்..."நீங்களே இப்படி பண்ணலாமா" - கொதிக்கும் மக்கள்

x

போலீஸ் பாதுகாப்புடன் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகன் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு ரீல்ஸ் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சில அரசியல்வாதிகளின் மகன்கள் திறந்தவெளி ஜீப்பில் போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்ட படி செல்லும் ரீல்ஸ் வெளியானது. அதில் ஜீப்பில் பயணம் செய்த இளைஞர்களுக்கு, ராஜஸ்தான் காவல்துறை பாதுகாப்பு வழங்கியபடி சென்றனர். ஜீப்பில் பயணம் செய்த இளைஞர்களில் ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவாவின் மகன் ஆஷூ பைர்வா என்பது தெரியவந்தது. துணை முதல்வரின் மகனே போக்குவரத்து விதிகளை மீறியிருப்பதற்கும், அதற்கு போலீசார் பாதுகாப்பு அளித்திருப்பதற்கும் பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்