"தயார்" - அதிமுக கிளியர் சிக்னல்...திட்டவட்டமாக மறுத்த பாமக - பாஜகவுக்கு ஷாக் மேல் ஷாக்..!
"தயார்" - அதிமுக கிளியர் சிக்னல்...திட்டவட்டமாக மறுத்த பாமக - பாஜகவுக்கு ஷாக் மேல் ஷாக்..!
மக்களவைத் தேர்தலில் எந்த அணியுடன் கூட்டணி என்பது குறித்த முடிவு, இந்த வாரத்திற்குள் எடுக்க வாய்ப்புள்ளதாக பாமக வட்டாரம் தெரிவிக்கிறது...பாமகவும், தேமுதிகவும் எந்த அணியில் இணையப் போகின்றன என்ற முடிவு எடுக்க முடியாமல் இருப்பதால் குழப்பம் நீடித்து வருகிறது. பாமகவை பொறுத்தவரை, அதிமுக, பாஜக என 2 தரப்பிலிருந்தும் அழைப்பு விடுக்கப்பட்டதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் தொகுதி எண்ணிக்கையில் உடன்பாடு எட்டப்படாததால், தற்போது வரை பாமக முடிவு எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையே பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், டெல்லி சென்று பாஜக தலைவர்களை சந்தித்ததாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அனைத்து கருத்துகளையும் பாமக மறுத்ததோடு, இதுவரை எவ்வித முடிவும் எடுக்கவில்லை என பாமக வழக்கறிஞர் பாலு தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில், கூட்டணி தொடர்பாக இந்த வாரத்திற்குள் முடிவு எடுப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதாக பாமக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதிமுக தரப்பில் 7 மக்களவைத் தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா இடமும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக தலைமையிலான அணியில் பாமக அதிக இடங்களை எதிர்பார்ப்பதால் அந்த அணியில் இடம் பெறுவதிலும் குழப்பம் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.