வடை சுட்டு வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ
#royapurammano #admk
டீக்கடையில் வடை சுட்டு வடசென்னை அதிமுக வேட்பாளர் இராயபுரம் மனோ வாக்கு சேகரித்தார். வடசென்னை அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். நேற்று கொளத்தூர் தொகுதிக்கு உட்பட்ட மதுரை வீரன் கோயில் தெருவிலிருந்து பிரச்சாரத்தை தொடங்கிய அவர், பேப்பர் மில்ஸ் சாலை, சபாபதி தெரு பகுதிகளில், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் டீக்கடை ஒன்றில் வடை சுட்டு மக்களிடம் வாக்கு சேகரித்தார். மேலும், திரு.வி.க நகர் மீன் மார்கெட்டில் மீன் வியாபாரிகளிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.
Next Story