ரேஷனில் அரிசியை நம்பியுள்ளவர்களை அதிர்ச்சியாக்கும் செய்தி

x

ராமநாதபுரத்தில் ரயில் நிலையத்திலிருந்து லாரிகளோடு கடத்தப்பட்ட 50 டன் ரேஷன் அரிசியை போலீசார் தேடிப் பிடித்தனர்.இராமநாதபுரம் மாவட்டத்தில், நியாய விலை கடைகள் மூலம் வினியோகம் செய்வதற்காக ஆந்திராவில் இருந்து ரயில் மூலம், 21 பெட்டிகளில் 26 ஆயிரத்து 344 டன் அரிசி கடந்த 30ஆம் தேதி வந்தது. இதனை லாரிகளில் ஏற்றி நுகர்வோர் வாணிபக்கழக கிடங்குக்கு எடை போட்டு எடுத்துச் செல்லும் பணியின் போது, இரு லாரிகளில் 50 டன் ரேஷன் அரிசியை கடத்திச் சென்று விட்டதாக ஒப்பந்ததாரர் ரவி என்பவர் இராமநாதபுரம் பி1 காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் நரிப்பையூரை சேர்ந்த ஓட்டுநர் சண்முக சுந்தரத்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் இரண்டு லோடு ரேஷன் அரிசியையும் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே புதுவயல் பகுதியில் உள்ள ஒரு குடோனில் இறக்கிவிட்டு லாரிகள் தூத்துக்குடிக்கு சென்றது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து கடத்திச் செல்லப்பட்ட 50 டன் ரேஷன்


Next Story

மேலும் செய்திகள்