ரேஷன் பொருட்களுக்கு 12 கி.மீ.. "இலவசம்.. ஆனால் ரூ.400 செலவு" - சாலை இல்லாமல் தவிக்கும் மக்கள்
ரேஷன் பொருட்களுக்கு 12 கி.மீ.. "இலவசம்.. ஆனால் ரூ.400 செலவு" - சாலை இல்லாமல் தவிக்கும் மக்கள்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகாவிற்கு உட்பட்ட பெரியூர் மலை கிராம மக்கள் சாலை வசதியின்றி தவித்து வருகின்றனர். அப்பகுதி மக்களுக்கான ரேஷன் பொருட்கள் மாதந்தோறும் கிராமத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள உப்புக்காட்டு பகுதியில், லாரியில் கொண்டு வரப்பட்டு வழங்கப்படுகிறது. உரிய சாலை வசதி இல்லாததால், ரேஷன் பொருட்களை வாங்கும் மக்கள், நடந்தே தூக்கி செல்லும் நிலை உள்ளது. இல்லையென்றால் 400 ரூபாய் கொடுத்து குதிரைகள் எடுத்துச் செல்வதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
Next Story