கும்பலாக ஒருவருக்கு வீசிய வலை..ஒரு பெயரை வைத்து மெகா மோசடி - அதிர்ந்த ராணிப்பேட்டை

x

ராணிப்பேட்டையில், சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தியுள்ளதாகக் கூறி, 5 லட்சம் ரூபாய் மோசடி செய்த மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டம், ஏகாம்பரநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மெர்லின். இவரது தந்தை உயிரிழந்த நிலையில், அவருக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலம் சிப்காட் தொழிற்பேட்டையையொட்டி அமைந்துள்ளது. இந்நிலையில், அந்த நிலத்தை தொழிற்பேட்டைக்கு தேர்வு செய்திருப்பதாகவும், அதன்பேரில் இழப்பீடு தொகையாக ஒரு கோடியே 30 லட்சம் ரூபாய் அரசு கொடுப்பதாகவும் ஜெயகாந்தன் என்பவர் மெர்லினிடம் கூறியுள்ளார். மேலும், மெர்லினை நம்ப வைப்பதற்காக சுவாதி என்ற பெண்ணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்றுவதாகக் கூறி அப்பெண் மூலம் இத்தகவலை தெரிவித்துள்ளார். இதற்கு முன்பணமாக 5 லட்சம் ரூபாயையும் மெர்லினிடமிருந்து ஜெயகாந்தன் பெற்றுள்ளார். இதனிடையே, ஜெயகாந்தனிடமிருந்து பணத்தை திருட திட்டம் தீட்டிய சுவாதி, பரத் என்பவர் மூலமாக அந்த பணத்தை கொள்ளையடித்துள்ளார். பின்னர், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து மெர்லின் போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில், மூவரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்