"என் புள்ளைய கூப்பிடுங்க.. பார்க்கணும்" - இறந்த மகனின் உடலை பார்த்து கதறி துடித்த தாய்

x

லாரியின் பின்னால் இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் தனியார் கல்லூரி மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அடுத்துள்ள சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து அரங்கேறி இருக்கிறது. காவேரிப்பாக்கத்தை சேர்ந்த 19 வயது இளைஞரான பிராங்கிளின் என்பவர் இந்த சம்பவத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த சபியுல்லா என்ற இளைஞர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, மகனின் இறப்பை ஏற்க மறுத்து மருத்துவமனை வளாகத்தில் இளைஞரின் தாய் கதறி அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது...


Next Story

மேலும் செய்திகள்