தமிழகத்தில் கால் பதிக்கும் டாடா... மக்கள் குறிப்பிட்டு சொன்ன விஷயம்
தமிழகத்தில் கால் பதிக்கும் டாடா... மக்கள் குறிப்பிட்டு சொன்ன விஷயம்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அமைய உள்ள டாடா கார் தொழிற்சாலையில், உள்ளூர் இளைஞர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 9 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில், பனப்பாக்கம் பகுதியில் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலை அமைய உள்ளது. இதற்கான கட்டுமானப் பணிகளுக்காக, வரும் 28ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தொழிற்சாலை அமைவதற்கு நிலங்களை கொடுத்து ஒத்துழைப்பு வழங்கி வரும் சுற்றுவட்டாரப் பகுதி மக்கள் பயன்பெறும் வகையில், உள்ளூரில் படித்த இளைஞர்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story