ஹாஸ்பிடலில் படுத்து நாடகம் போட்ட மாப்பிள்ளை... கையோடு பிடித்து வாசலிலேயே தாலி கட்ட வைத்த பெண்

x

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, நிச்சயம் முடித்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்த மாப்பிள்ளையை மருத்துவமனையிலேயே வைத்து தாலி கட்டச் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த தினேஷ்குமாருக்கும், கரிக்கந்தாங்கல்லை சேர்ந்த லாவண்யாவுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் திடீரென திருமணம் வேண்டாமென தினேஷ்குமார் கூறியதுடன், வீட்டில் இருந்த எறும்பு மருந்தை சாப்பிட்டுவிட்டு த*கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

பின்னர் இது நாடகம் என தெரியவந்ததால், மருத்துவமனை முன்பு பெண் வீட்டார் திரண்டனர். இதையடுத்து, தினேஷ்குமாருக்கும், லாவண்யாவுக்கும் மருத்துவமனையிலயே திருமணம் நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்