போனை கட் செய்த மனைவி... மாமியார் வீட்டில் புகுந்து சரமாரியாக வெட்டிக் கொன்ற கொடூர கணவன்

x

ராணிப்பேட்டை மாவட்டம், பாணாவரத்தைச் சேர்ந்த சந்தியாவுக்கும், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே. பேட்டையைச் சேர்ந்த ஓம்பிரகாசுக்கும் திருமணமாகி 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான ஓம்பிரகாஷ், கஞ்சா, கொலை முயற்சி, வாகன திருட்டு உள்ளிட்ட வழக்குகளிலும் சிக்கியுள்ளார். இதனையடுத்து, அவர் சரித்திர பதிவேடு குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். இதனால், கணவன் - மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சில நாட்களுக்கு முன் சந்தியா கோபித்துக் கொண்டு, பாணாவரத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். ஓம்பிரகாஷ் செல்போனில் மனைவியை தொடர்பு கொண்டபோது, அவர் பேச மறுத்ததாக தெரிகிறது. இந்நிலையில், பாணாவரத்திற்குச் சென்ற ஓம்பிரகாஷ், மறைத்து வைத்திருந்த கத்தியால், மனைவி சந்தியாவை சரமாரியாக வெட்டி விட்டு தப்பிச் சென்றார். பலத்த வெட்டுக்காயமடைந்த சந்தியா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சந்தியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் ஓம் பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்