ராமேஸ்வரம் பாம்பனில் திடீர் மாற்றம் | rameshwaram
ராமேஸ்வரம் பாம்பனில் திடீர் மாற்றம்
பலூன்களை பயன்படுத்தி படகுகளை கரைக்கு ஏற்றி இறக்கும் நவீன தொழில்நுட்பத்தை பாம்பன் மீனவர்கள் வரவேற்றுள்ளனர்...கடலில் நிற்கும் படகுகள் பழுதாகும் போதோ, பராமரிப்பு பணியின் போதோ அவற்றை கரைக்குக் கொண்டு வந்து பழுது பார்த்து சீர்படுத்தி மீண்டும் கடலுக்குள் இறக்கி விடுவது மீனவர்களுக்கு பெரும் சவாலாகவே இருந்து வந்தது... கால மாற்றத்தால் படகுகள் பெரிதாக்கப் பட்டதுடன் நவீன காலத்திற்கு ஏற்றார் போல தற்போது ஸ்டீல் படகுகளாகவும் மாற்றப்பட்டு வருகின்றன. இவற்றைக் கடலுக்குள் இறக்கி கரைக்குக் கொண்டு வருவதென்பது பழைய முறையால் முடியாது என்பதால் பெரிய கப்பல் துறைமுகங்களில் மட்டுமே பயன்படுத்தப்படும் நவீனதொழில் நுட்பமான பலூன்கள் மூலம் படகுகளை கரைக்குக் கொண்டு வரும் முறை தமிழகத்தில் தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக ராமேஸ்வரம் தீவுப்பகுதியிலுள்ள பாம்பனில் தொடங்கப்பட்டுள்ளது. கயிறு மற்றும் கம்பியால் படகு கட்டப்பட்டு மின்சார இழுவை இயந்திரத்தோடு இணைக்கப்படுகிறது. படகு எளிதாக நகர படகின் அடியில் காற்று நிரப்பிய பலூன்களை வைத்து படகை இழுக்கின்றனர். படகு மெத்தையிலிருப்பது போல ஆடாமல் அசையாமல் பலூன்கள் மேல் நகர்ந்து பத்திரமாக கரைக்குக் கொண்டு வரப்படுகிறது. இதே முறையிலேயே கடலிலிருந்து படகுகள் கடலுக்கு இறக்கப்படுகின்றன... ஒரு மணி நேரத்தில் வேலை முடிந்து விடும் நிலையில், படகுகளும் சேதாரம் ஆவதில்லை என்பதால் இது மீனவர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது...