பொது மன்னிப்பில் விடுதலையாகி வந்த வரை - ஆரத்தி எடுத்து வரவேற்ற உறவினர்கள்
இலங்கை சிறையில் இருந்து பொது மன்னிப்பில் விடுதலையாகி வந்த மீனவரை, உறவினர்கள், பொன்னாடை போர்த்தி ஆரத் தழுவி வரவேற்றனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த ஆண்டு, ஜூலை 21-ஆம் தேதி மீன்பிடிப்பதற்கான அனுமதி சீட்டைப் பெற்று மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். இந்த நிலையில் எல்லை தாண்டியதாக கூறி, இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்திருந்தது. இந்த நிலையில் படகோட்டி ராபர்ட் என்ற மீனவருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்ப்டடது. இந்த நிலையில் இலங்கையில் கைதிகள் தினத்தன்று பொது மன்னிப்பில் சுமார் 350 கைதிகளை விடுதலை செய்ய அந்நாட்டு அதிபர் முடிவு செய்திருந்தார்.இதையடுத்து ராபர்ட் விடுதலையானார்.
Next Story