``நடந்தாலே 1 ஹவர் தான்..'' ``ஆபீஸ் போக 2 மணி நேரம் ஆகுது.." ராமாபுரம் ட்ராபிக் - குமுறும் மக்கள்

x

சென்னை போரூரில் உள்ள ராமாபுரம் பிரதான சாலையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் காலை, மாலை வேளைகளில் 2 கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. அதேபோல பரங்கிமலையில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் வரை மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் போரூரில் இருந்து கத்திப்பாரா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கின்றன. இதுகுறித்து பேசிய வாகன ஓட்டிகள், போக்குவரத்து நெரிசலால் அரைமணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை கால தாமதம் ஆவதாகவும், போக்குவரத்தை சீர் செய்ய கூடுதலாக போலீசாரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்