ஆசை வார்த்தை.. வீடியோ.. கூட்டு பாலியல் வன்கொடுமை - ராமநாதபுரத்தை பதற வைத்த 6 பேர்
ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டி சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்த வழக்கில் மேலும் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். வழக்கில் தொடர்புடைய 17 வயது சிறுவன் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். இந்நிலையில், முகமது ரிஸ்வான், கவின், முபின், மதனீஸ்வரன் ஆகிய நால்வர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோவைக் காட்டி இணையத்தில் பரப்பி விடுவதாகக் கூறி அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும் இளம் பெண்ணிடம் நகை, பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய ஒரு நபர் வெளிநாடு தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.
Next Story