மதுபான கடை அருகே பெண் சடலம்.. ரத்தக் களரியான முகம்.. அதிர்ச்சியில் மக்கள்
திருவாடானை அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் முனீஸ்வரி. திருவாடானை ஊராட்சியில் தூய்மை பணியாளரான இவருக்கு திருமணமாகி இரு மகள்கள் உள்ள நிலையில், மகள்கள் இருவரும் திருமணமாகி சென்றதாக கூறப்படுகிறது. இதனிடையே, முனீஸ்வரிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், திருவாடானை அடுத்த எல்.கே.நகர் பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடை அருகே, மர்மமான முறையில் முகத்தில் ரத்த காயங்களுடன் முனீஸ்வரி சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், பெண்ணின் சடலத்தை கைப்பற்றி மருத்துவமனை கொண்டு சென்ற நிலையில், இதன் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story