வெளியே தெரிந்த எலும்பு கூடுகள், சவப்பெட்டிகள்.. உயிர் பயத்தில் கிராமத்தினர்.. ராம்நாட்டில் அதிர்ச்சி
ராமநாதபுரம் சாயல்குடி அருகே கடல் சீற்றத்தால் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக கூறிய மீனவ அமைப்பினர், மீனவர்களுக்கு ஒதுக்கிய நிதி என்ன ஆனது என கேள்வி எழுப்பியுள்ளனர். ரோச்மாநகர் பகுதியில் கடல் சீற்றத்தால் கடல் அரிப்பு ஏற்பட்டு, கடற்ரையோரம் கல்லறை தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த மனித உடல்களின் எலும்புக்கூடுகள், சவப்பெட்டிகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்த மீனவ அமைப்பினர், தங்களுக்காக அரசு ஒதுக்கும் நிதி எங்கு செல்கிறது என கேள்வி எழுப்பினர்.
Next Story