"ஸ்பூன் மேல அசைந்த ஒரு உருவம்..." ..வாந்தி எடுத்து அதிர்ச்சியில் உறைந்த பெண்
ராமநாதபுரத்தில் புத்தக திருவிழா உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட சுண்டலில் புழு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் கடந்த 2-ஆம் தேதி முதல் புத்தக திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டு உணவுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில், சாஹிதா பானு என்ற பெண் புத்தக திருவிழாவை பார்வையிட்ட பின்னர் அங்கிருந்த உணவகத்தில் சுண்டல் வாங்கி சாப்பிட்டுள்ளார். அதில் புழு இருந்ததை கண்ட அவர், சம்பவம் தொடர்பாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், புழு இருந்த சுண்டலை சாப்பிட்டதால் அவருக்கு வாந்தி ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதைத் தொடர்ந்து, சுண்டலை சோதனை செய்வதற்காக அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.
Next Story