அண்டா அண்டாவாக கறி விருந்து.. பெண்கள் பார்க்கவே கூடாது - புதைக்கப்பட்ட பொருள்கள்

x

கமுதி அருகே உள்ள முதல்நாடு கிராம கண்மாய் கரையில் அமைந்துள்ளது எல்லைப்பிடாரி அம்மன் பீடம். இங்கு வருடத்திற்கு ஒருமுறை புரட்டாசி மாதத்தில் ஆண்கள் மட்டும் வழிபடும் வினோத திருவிழா நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டுக்கான விழா விமரிசையாக நடைபெற்றது. திருவிழாவுக்காக ஊர் கூடி வசூலித்து, ஆண்கள் மட்டும் ஒன்று கூடி, கால் படாதவாறு மண்ணெடுத்து பீடம் அமைத்தனர். பின்னர் மாலை அணிவித்து பொங்கல் வைத்து, கைக்குத்தல் அரிசி சாதம் செய்து, செம்மறி கிடாய் பலியிட்டு, சாதம் உருண்டைகளாக உருட்டி அம்மனுக்கு பூஜை செய்யப்பட்டது. இதையடுத்து சாத உருண்டை மற்றும் கறி விருந்து பரிமாறப்பட்டது. இங்குள்ள எந்த பொருளையும் பெண்கள் பார்க்க கூடாது என்பதால் மீதமிருந்த சாப்பாடு, விபூதி மற்றும் பூஜை பொருட்கள் அங்கேயே புதைக்கப்பட்டது. கமுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள், விருதுநகர், சிவகங்கை மற்றும் மதுரையில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண்கள், மலர் மாலையுடன் வந்து அம்மனை வழிபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்