கையோடு பெயர்ந்து வரும்... புத்தம் புது சாலை... ``இதுக்கு கோடி ரூபாயா..?'' கொதித்தெழுந்த மக்கள்
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தரமற்ற முறையில் சாலை போடப்பட்டதை கண்டித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
டி.வேப்பங்குளம் ஊராட்சிக்கு உட்பட்டது கட்டாலங்குளம் கிராமம். இந்த கிராமத்தில் 15 ஆண்டுகளுக்குப்பிறகு ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பில் புதிய தார் சாலைகள் மற்றும் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டுள்ளது. தார் சாலையின் தாரை கையால் எடுத்தால் கையோடு வருகிறது. சிமெண்ட் சாலையை குச்சியால் தட்டினால் தகர்ந்து உடைகிறது. தரமற்ற முறையில் சாலைகள் போடப்பட்டதை கண்டித்து, அப்பகுதி மக்கள், தலையில் முக்காடு போட்டு போராட்டம் நடத்தினர்.
Next Story