மதுரை எய்ம்ஸ்-க்கு கனவோடு வந்த தந்தை.. மகன் கொடுத்த ஷாக் ட்விஸ்ட்..

x

மதுரை எய்ம்ஸ்-க்கு கனவோடு வந்த தந்தை.. மகன் கொடுத்த ஷாக் ட்விஸ்ட்..

ராமநாதபுரத்தில் செயல்படும் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்காக, போலி ஆவணங்களை கொடுத்த இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த மாணவரை போலீசார் கைது செய்தனர்.எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி நிர்வாக அலுவலர் கணேஷ் பாபு, ராமநாதபுரம் கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், மாணவர் சேர்க்கை கடந்த 19ம் தேதியுடன் முடிவடைந்து விட்டதாகவும், இந்நிலையில் இமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த அபிஷேக் என்ற மாணவர், தனது தந்தை மகேந்திர சிங் என்பவருடன், கடந்த 25ம் தேதி நேரில் வந்து, எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் சேர்க்கைக்கான உத்தரவு பெற்றிருப்பதாக கூறி ஆவணங்களை அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். அவற்றை சோதித்துப் பார்த்ததில்,

நீட் ஸ்கோர் கார்டு போலியானது என்பது தெரிய வந்ததால், இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திய நிலையில், தந்தைக்கு தெரியாமல், நீட் ஸ்கோர் கார்டில் போலியான முறையில் மதிப்பெண்களை தயார் செய்ததை ஒப்புக்கொண்டதன் அடிப்படையில், மாணவர் அபிஷேக்கை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்