குழி தோண்டும்போது ஏற்பட்ட விபத்து.. "உடனே கடையை அடைச்சிட்டோம்".. ராமநாதபுரத்தில் பரபரப்பு
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே குடிநீர் குழாய் இணைப்பு பணிக்காக, ஜேசிபி இயந்திரம் மூலம் குழி தோண்டப்பட்டது. அப்போது கேஸ் இணைப்பு குழாயை தவறுதலாக உடைத்து விட்டதால், 20 அடி உயரத்திற்கு எரிவாயு பீய்ச்சி அடித்துள்ளது. அப்பகுதியில் மின்சாரம் தடைப்பட்டிருந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதையடுத்து உடைப்புகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் ஜேசிபி மூலம் பள்ளம் மூடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Next Story