சாந்தன் மரணம்.. உலகத் தமிழர்களை கலங்கடித்த ரத்தக்கண்ணீர் கடிதம்

x

ஒரு மாதமாக தங்களுடன் உறவாடி பேசி உலாவிய சாந்தன் தற்போது உயிரோடு இல்லை என ராபர்ட் பயஸ் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தன் மறைந்த நிலையில், ராபர்ட் பயஸ் உருக்கமாக ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், 32 ஆண்டு சிறை வாழ்க்கை முடிந்தது என்று எண்ணிய எங்களுக்கு, சிறப்பு முகாம் வாழ்க்கை கொடுஞ்சிறையாக உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சாந்தன் உட்பட இரண்டு பேர் சிறப்பு முகாமில் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ராபர்ட் பயஸ்,

இலங்கைக்கு அனுப்புமாறு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட போது, உறுதி அளித்தப்படி அரசு கடமையை செய்திருந்தால், இன்று சாந்தன் தாயாருடன் மகிழ்ச்சியாக இருந்திருப்பார் என ஆதங்கப்பட்டுள்ளார்.

ஒருமுறையாவது மகனை பார்த்துவிட மாட்டோமா என ஏங்கிய சாந்தனின் தாயாரிடம் உடலை தான் கொண்டு சேர்த்திருக்கிறோம் என வேதனையை பகிர்ந்துள்ளார்.

33 ஆண்டுகால பிரிவுக்கு பிறகு ஒரு நாளாவது குடும்பத்துடன் சேர்ந்துவிட மாட்டோமா என ஏங்கியுள்ள ராபர்ட் பயஸ்,

சாந்தனை போன்று அல்லாமல், எங்களையாவது கடைசி காலத்தில் குடும்பத்துடன் சேர்ந்து வாழ வைப்பதற்கு இந்த அரசு நடவடிக்கை எடுக்குமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்