ராஜீவ் காந்தியுடன் உயிர்நீத்த 9 காவலர்களுக்கு காவல்துறை சார்பில் அஞ்சலி
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியுடன் உயிர்நீத்த 9 காவலர்களுக்கு காவல் துறை சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 1991-ம் ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்திருந்த அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். இந்த தாக்குதலில் ஒரு டி.எஸ்.பி. உட்பட 9 காவலர்கள் என மொத்தம் 15 பேர் உயிரிழந்தனர். உயிர்நீத்த காவலர்களுக்கு ஆண்டுதோறும் காவல் துறை சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெறுவது வழக்கம். 33-வது ஆண்டு நினைவு நாளையொட்டி சிறப்பு விருந்தினராக முன்னாள் டிஜிபி தேவாரம் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். நினைவிடத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை, எம்.பி., விஜய் வசந்த் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். காங்கிரஸ் மருத்துவ அணி சார்பில் மருத்துவ முகாமும் நடைபெற்றது.
Next Story