பதவியேற்ற சிறிது நாட்களில் விபத்தில் சிக்கிய முதல்வர்... ராஜஸ்தானில் பரபரப்பு
உத்தரப்பிரதேச மாநில எல்லையில் உள்ள கோவர்தன் கிரிராஜ் தலத்திற்கு புனித யாத்திரையாக, ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் ஷர்மா காரில் சென்று கொண்டிருந்தார். சாலையைவிட்டு கார் திடீரென விலகி, சாலையோரத்திலுள்ள கழிவுநீர் கால்வாயில் சிக்கி விபத்துக்குள்ளானது. எனினும், காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. பின்னர் மற்றொரு காரில் பஜன்லால் ஷர்மா யாத்திரை தலத்திற்குச் சென்றார். இதனிடையே, பஜன்லால் ஷர்மா முதலமைச்சராக பதவியேற்றபின் முதன்முறையாக தனது சொந்த ஊரான பரத்பூர் சென்றபோது பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
Next Story