வைரலான டிரைவிங் ஸ்கூல் அதிர்ச்சி வீடியோ, ஆடியோ... அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய அதிகாரி

x

ராஜபாளையத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்குள் தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரத்தில், தாக்குதல் நடத்திய நபரின் ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் உரிம‌ம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

ராஜபாளையத்தில் ஓட்டுநர் பயிற்சி பள்ளி ஒன்றில், கடந்த மாதம் 5 பேர் கொண்ட கும்பல் தாக்கியது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த‌து. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தியபோது, தாக்குதல் நடத்தியது மற்றொரு ஓட்டுநர் பயிற்சி பள்ளியின் உரிமையாளர் வேல்முருகனும், அவரது நண்பர்களும் என்று தெரிய வந்த‌து. இதனிடையே, தாக்குதல் நடத்திய நபர், அதிகாரிகளுக்கு லஞ்சம் வாங்கித் தருபவர் என்றும், அதற்கு பிரதிபலனாக ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கு உரிம‌ம் வழங்கப்பட்டதாகவும், ஓட்டுநர் பயிற்சி சங்கத்தைச் சேர்ந்த பொற்கொடி என்பவரின் ஆடியோ பரவி வருகிறது. இதையடுத்து, வேல்முருகனின் ஓட்டுநர் பயிற்சி பள்ளிக்கான உரிமத்தை 6 மாத‌த்திற்கு ரத்து செய்து வட்டார போக்குவரத்து அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்